மனத்தில் பதிந்தவை

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடின்
மனிதரின் மொழிகள் தேவை இல்லை !
இதயத்தின் மொழிகள் புரிந்து விடின்
மனிதர்க்கு மொழியே தேவை இல்லை !

மண் குடிசை வாசல் என்றால்
தென்றல் வர மறுத்திடுமா !
வான நிலா ஏழை எனறால்
ஒளி கொடுக்க மறந்திடுமா !

மானம் என்ற உயிர் காக்க
மனக்கதவை மூடிக் கொண்டேன் !
அது நாலு பக்கம் திறந்து கொண்டால்
நான் அதற்கு என்ன செய்ய !

புத்தம் புது பூமி வேண்டும் !
நித்தம் ஒரு வானம் வேண்டும் !
தங்க மழை பொழிய வேண்டும் !
தமிழில் குயில் பாட வேண்டும் !
நெற்றி வியர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பொழிய வேண்டும் !

உனக்கும் எனக்கும் எல்லாம்
பிடிக்கும் என்றாய் ! அடி ஏன்
என்னை மட்டும் பிடிக்காதென்றாய் !

உள்ளே போன அத்தனை பேரும்
குற்றவாளி இல்லேங்க !
வெளியே உள்ள அத்தனை பேரும்
புத்தன் காந்தி இல்லேங்க !

நடந்தா இரண்டடி
இருந்தா நாலடி
இறந்தா ஆறடி
இது அத்தனை பேருக்கும்
இறைவன் கொடுத்த வரம் !